உலகின் புதிய கடவுள்

பெப்ரவரி 23, 2007

28.காதலிக்காக $12,000

Filed under: Uncategorized — Selvan @ 4:45 மு.பகல்

காதலர் தினத்தில் சராசரியாக ஒரு அமெரிக்க காதலன் தன் காதலிக்காக $128 செலவு செய்கிறான். அமெரிக்க காதலி $74 செலவு செய்கிறாளாம். பெரும்பாலும் இத்தொகை பூக்கள்,சாக்லட்,கிரீடிங் கார்ட் மற்றும் டின்னருக்கு செலவாகிறதாம்.

முத்தம் இல்லாமல் காதலர் தினமா?மூன்றில் ஒரு பங்கு அமெரிக்க பெண்கள் காதல் தினத்தன்று “நறுமணம்” வீசும் உணவுப்பண்டங்களை தவிர்ப்பார்களாம் (குளோசப் கவனிக்க) காதலர் தினத்தன்று $128 செலவு செய்யும் காதலன் வருடம் முழுவதும் எவ்வலவு செலவு செய்வானாம்?அதிகமில்லை ஜென்டில்மென்.$12,000 என்கிறது பெஸ்ட் லைப் பத்திரிக்கை நடத்திய சர்வே.

இந்த $12,000ல் பூக்களுக்கு மட்டும் $300, டின்னருக்கு $2526, தியேட்டர், கன்சர்ட்டுக்கு $752. 50 வருடங்களில் ஆண் மனைவுக்கு செய்யும் செலவு தொகை $590,400 (விலைவாசி அட்ஜஸ்ட் செய்தபிறகு) இதெல்லாம் கலாச்சார ஜென்டர் ரோல்களின் தாக்கம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆண்கள் தான் காதலிக்கு செலவு செய்ய வேண்டும் என்பது ஐரோப்பிய கலாச்சாரம். காதலர் தினத்தன்று டட்ச் டிரீட்(உன் பில்லை நீ கட்டு,என் பில்லை நான் கட்டுகிறேன்) செய்யும் காதலனை எந்த பெண்ணாவது மதிப்பாளா?அல்லது காதலிக்கு பூ,நகை என வாங்கித்தராமல் காதலை சொல்லத் தான் முடியுமா? புத்திசாலி காதலர்கள் 50/50 என்ற விகிதத்தில் செலவு செய்வதும் உண்டாம்.

சில பெண்ணுரிமையை நம்பும் பெண்கள் முழு தொகையையும் காதலன் தலையில் கட்டுவதில்லை.50:50 என செலவுத் தொகையை பகிர்ந்து கொள்கிறார்கள். யாரையும் நம்பி நான் இல்லை என்பது அவர்கள் வாதம். யார் காசு கொடுத்தா என்ன, கல்லா நிறைஞ்சா போதாதா என்கின்றனர் கடைக்காரர்கள்.

காதலர் தினத்தன்று மட்டும் $13.7 பில்லியன்(ரூ50,000 கோடி) அளவுக்கு விற்பனை அதிகமாகிறதாம்.இப்படி இருக்கும்போது காசு யார் கட்டுகிறார்கள் என பார்த்துக்கொண்டிருந்தால் முடியுமா? இதில் பல ஆச்சரியமான விஷயங்கள் உள்ளன.காதலர் தினத்தில் அதிகமாக செலவு செய்பவர்கள் 45 – 54 வயதினராம். தலைக்கு $135 (ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட சமமாக) செலவு செய்கின்றனராம்.குறைந்த அளவில் செலவு செய்பவர்கள் 18 – 24 வயதினராம்($81 மட்டுமே.)இரண்டு வருடத்துக்கு முன் $153 செலவு செய்தார்களாம் இவர்கள்.(பாக்கட் மணி அப்பன் கிட்ட சண்டை புடிச்சு வாங்குங்க கண்ணுகளா)

பூரா தொகையையும் காதலன் காதலிக்கே செலவு செய்வதில்லை. குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு $ 20 செலவு செய்கிறார்களாம். நண்பர்களுக்கு $5.06 செலவு செய்கிறார்களாம்.(நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் சிறிதளவு பாய்கிறது.ஏதோ பெத்தவங்களை மறக்காம இருந்தா சரின்கறீங்களா?)

62% பேர் கிரிட்டிங் கார்ட் வாங்குவார்களாம். 47% சாக்லேட் வாங்குவார்களாம் 42% வெளிய ஊர் சுத்த போவாங்களாம். 10% கிப்ட் கார்ட்,கிப்ட் தருவார்களாம். 52% ஆண்கள் பூ வாங்குவார்களாம், 15% பெண்கள் பூ வாங்குவாங்க(பொக்கே,பிளவர் பாஸ்கட்ங்க,தலைல வெக்கற பூ கிடையாது) 22.4% நகை வாங்கி கொடுப்பாங்களாம் 5% ஆண்களும்,12% பெண்களும் டிரஸ் கிப்ட் பண்ணுவாங்களாம். 2005 வாலன்டைன் டே தகவல்கள் 18 கோடி ரோஜாக்கள் விற்றன. $2.4 பில்லியன்(ரூ 10,000 கோடி) மதிப்புக்கு நகை விற்றது 18 கோடி கார்டு விற்றது(ரோஜா விற்பனையும் கார்டு விற்பனையும் சமமாக இருக்கு பாத்தீங்களா?) 3.6 கோடி இதய வடிவ சாக்லட் பாக்ஸ் விற்றதாம்.

நாட்டின் நாலாவது பெரிய ஷாப்பிங் திருவிழா காதலர் தினமாம்(கிறிஸ்துமஸ்,ஈஸ்டர்,ஆலோவின் அடுத்தாம்) பூக் கடைக்காரர்களுக்கு அதிக விற்பனையாகும் நாளும் காதலர் தினமாம். தினமும் காதலர் தினமாவே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என்கிறார்களாம் கடைக்காரர்கள்.அவங்க ஆசைய நிறைவேத்துவோமே?தினம் தினம் காதலர் தினம் கொண்டாடலாம். சண்டை சச்சரவு எதுவும் இருக்காது. எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்க. என்ன சொல்றீங்க?

25.அசைவ உணவு சாப்பிடுதல் சரியே–கோழி புத்திமதி

Filed under: Uncategorized — Selvan @ 4:15 மு.பகல்

கிபி 40016 வருடம் கோழி முரசு பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரை. எழுதியவர் திரு முத்து கோழி.

“வர வர இந்த CETH (Chickens for ethical treatment of humans) சைவ உணவு அமைப்பினர் செய்யும் அட்டூழியங்கள் எல்லை மீறிப்போகின்றன. சோதனை மனிதர்கள் மீது மருத்துவ பரிசோதனை நடத்துவதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கின்றனர். போன வாரம் KFH (Kentucky friend humans) உணவு விடுதி முன் அசைவ உணவு பரிமாறப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். கோழிகளை படைத்த கோழிக்கடவுள் 7 அறிவு கொண்ட கோழிகளுக்காகவே மனிதன் உள்ளிட்ட ஆறறிவு படைத்த விலங்கினங்களை உணவுக்காக படைத்திருப்பதாக கோழி வேதம் கூறுகிறது.

மேலும் அசைவ உணவு உண்பது கோழிகளின் உடல் அமைப்புக்கு பொருத்தமானது என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மனிதர்களை குத்திக்கிழிக்கவே கோழிகளுக்கு கூரிய அலகை கோழிக்கடவுள் கொடுத்துள்ளார். கோழிகள் சைவ உணவு அருந்துவது சிறிதும் அவற்றின் இயற்கையமைப்புக்கு பொருத்தமற்றது. இறைச்சிக் கூடங்களில் மனிதர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக சைவ கோழி அமைப்பினர் கூறுவது பொய்.

மனிதர்களின் பற்களை மயக்க மருந்து கொடுக்காமல் தட்டி எடுப்பது உண்மைதான். 20000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களும் இறைச்சிக்கூடங்களில் இப்படித்தான் கோழிகளின் அலகுகளை வெட்டி எடுத்தனர். மனிதன் தான் மிருகாபிமானம் இல்லாதவன்,கோழிகள் உயர்ந்தவை.கருணை காட்டுங்கள் என சைவ அமைப்பினர் சொல்வது சரியல்ல.

மனிதப்பல்லை தட்டி எடுப்பது அவர்களுக்குளே சண்டை வந்து கடித்துக் கொள்ளாமல் இருப்பதற்கே. பிறந்த மனித ஆண் குட்டிகளை பிறந்தவுடன் மெஷினில் போட்டு கொல்வதை சைவ அமைப்பினர் குறை கூறுகின்றனர்.ஆண் குட்டிகளால் பிரயோஜனம் இல்லை என்பதால் தான் பிறந்தவுடன் கொல்லபடுகின்றன.பெண்களின் இறைச்சிக்கே சுவை அதிகம்.மேலும் 20000 வருடம் முன்பு மனிதன் கூட இப்படித்தான் ஆண் கோழிக்குஞ்சுகளை பிறந்தவுடன் கொன்று கொண்டிருந்தான்.

உயிரோடு மனிதர்களை வெண்ணீரில் போட்டு தோலுரிப்பதாக சொல்வதும் சரியல்ல. எல்லா மனிதரையும் இப்படி செய்வதில்லை.5% மனிதர்கள் தான் இப்படி கொல்லபடுகின்றனர். இந்த எண்ணிக்கையை குறைக்க முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

சிக்ஸ் சிக்மா அறிமுகப்படுத்தியவுடன் 15% இருந்து இந்த எண்ணிக்கை 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மனித மாமிசம் புரதச்சத்து மிகுந்த ஒன்றாகும்.விடமின் B12 மனித மாமிசம் மூலமே கோழிகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மனித எலும்பு சூப் குடித்தால் கால்ஷியம் சத்து கிடைக்கும் என்பதும் உண்மை.

சைவ உணவு சாப்பிடும் கோழிகள் அசைவ உணவு சாபிடும் கோழிகளை விட வலு குறைந்தே காணப்படும். மேலும் உயிர்க்கொலை கூடாது என சொல்லும் சைவ அமைப்பினர் செடிகொடிகளுக்கும் உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்து பட்டினி கிடந்து சாவார்களா என்பதையும் கேட்க விரும்புகிறேன். இது எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் மருந்து கம்பனிகளில் சோதனை மனிதர்களை மருத்துவ சோதனைக்கு பயன்படுத்துவதை சைவ அமைப்பினர் எதிர்த்து அடிக்கடி போராட்டம் நடத்துவதுதான்.

மருந்து இல்லாமல் கோழி இனம் என்ன ஆகும்?சோதனை மனிதர்களின் கண்களில் அமிலம் ஊற்றப்படுகிறது, உயிரோடு வயிறு கிழிக்கப்படுகிறது என்றெல்லாம் பார்த்தால் மருத்துவ உலகம் என்னாவது? கோழி இனத்துக்கு வரும் வியாதிகளுக்கு என்ன செய்வது? ஆக இந்த சைவ அமைப்பினரின் சூழ்ச்சிக்கு அரசு பலியாகி மருத்துவ சோதனைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். மிருகாபிமானத்தோடு நடந்து கொள்ளவும் சைவ உணவு கோழிகளை கேட்டு கொள்கிறேன்.

24.உலகின் புதிய கடவுள்

Filed under: Uncategorized — Selvan @ 4:12 மு.பகல்

பின்நவீனத்துவத்தை பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.அவை எவ்வளவு தவறானவை என்பது அத்துறையை சரிவர அறிந்து கொண்டால் விளங்கிவிடும். உண்மையில் அத்துறை அறிவின் சுடர். அத்துறையை சேர்ந்த ஞானிகள் நாம் கண்டு வியக்கும் ஐரோப்பிய அமெரிக்க சமூதாயத்தை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகித்தவர்கள். பின்நவீனத்துவ தத்துவ துறைகளை பற்றி மட்டும் சிறிது எழுதுகிறேன். இவற்றுள் பல தத்துவ துறைகள் உண்டு.

இத்துறைகளுக்கிடையே பெரிய வித்த்யாசம் இல்லை.இவை மாறுபடுவது “உண்மை என்றால் என்ன?” என்ற கேள்வியில் தான். பின்நவீனத்துவத்தில் எனக்கு பிடித்த துறை ப்ரக்மாடிஸம் (pragmatism) என்ற ஒன்றாகும்.அதை முதலில் விளக்குகிறேன். 200 வருடங்களுக்கு முன் உண்மை மனிதனால் உருவாக்கப்படுவது, கண்டு பிடிக்கப்படுவதல்ல என்ற சிந்தனை ஐரோப்பாவில் பரவியது.மனிதன் யார்,மனித வாழ்வின் நோக்கம் என்ன,விஞ்ஞானம் என்றால் என்ன என்ற கேள்விகள் தத்துவ துறைகளில் விவாதிக்கப்பட்டன. டார்வின் வந்த பிறகு (டார்வினும் பின்நவீனத்துவ சிற்பிகளுல் ஒருவர்) இந்த விவாதம் சூடு பிடித்தது.

ஹெகலும் மார்க்ஸும் நீட்ச்ஷேயும் இந்த விவாதத்துக்கு ஒரு முடிவு கட்டினர். “சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுய தேடலின் உருவாக்கம்” என்ற கோட்பாட்டை முன்வைத்தார் ஹெகெல்.அன்றைய ஐரோப்பாவில் ” சமூக கட்டமைப்புகள் ஆண்டவனால் உருவாக்கபடுகிறது” என்ற கருத்து நிலவியது”. சமூகம்,குடும்பம்,அரசு இவை ஆண்டவனால் படைக்கபடுகைறது என்று நம்பிய ஐரோப்பிய சமூகம் ஹெகலை ஏற்றுக்கொள்லவில்லை. ஹெகலின் சிஷ்யப்பிள்ளையான மார்க்ஸ் “அந்த சுய தேடல் சமதர்ம சமூகம் அமைப்பதில் நீறைவுரும்” என்று சொன்னார்.

சமூகத்தில்,அறிவியலில், அரசியலில் ஆண்டவனுக்கு எந்த பங்கும் இருப்பதாக மார்க்ஸ் கருதவில்லை. இம் மூன்றிலும் இரூந்து மதத்தை, கடவுளை ஒழித்து கட்டினால் தான் மனித இனம் முன்னேறும் என்றார். (மார்க்ஸின் இந்த கருத்தை அவரின் சீடகோடிகள் பின்நாளில் நீறைவேற்றினர்.church state seperation, church science seperation போனறவை நிகழ்ந்தது இந்த அடிப்படையைல் தான்.) மார்க்ஸையும் டார்வினையும் நாத்திகர்கள் என்று ஐரோப்பீயரும் அமெரிக்கரும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்த போது நாத்திகம் ஆயிரம் மடங்கு பரவாயில்லை என்று சொல்லும்வணணம் ஒருவர் வந்தார்.அவர் தான் நீட்ச்ஷே. அவர் முன்னெடுத்த நிகிலிசம் (nihilism) என்ற கருத்தை கேட்டு ஐரோப்பியர் அலறினர்.”நான் கடவுளின் விரோதி(I am antichrist)” என அறிவிப்பு செய்தார் நீட்ஷே.”கடவுள் செத்துவிட்டார் (God is dead)” என்று எழுதினார்.

“எந்த மதபுத்தகத்தையும் படிக்காதீர்கள்.இதோ அதற்கு பதில் என் சராதுஷ்ட்ரா (zarathushtra) என்ற புத்தகத்தை படியுங்கள்.இதுதான் இனி உலகின் வேதம்” என்று அறிவித்தார். “மனிதன் ஏன் பிறந்தான் ” என்ற கேள்வி அர்த்தமற்ற்து.”வாழ்வின் லட்சியம் என ஒன்றும் கிடையாது.உண்மை என ஏதுவும் கிடையாது” என சொன்னார்.

 19ம் நூற்றண்டில் ஏற்பட்ட கலை, அறிவியல்,சமூக,தத்துவ,தொழில் புரட்சிகளயெ நாம் நவினத்துவம் என்கிறோம். மிகப்பெரும் அறிவியல் முன்னெற்றங்கள்,தொழில் புரட்சி,கலை,இலக்கிய,சமூக புரட்சிகள் (எ.கா அடிமை ஒழிப்பு 1865,காலனிஆதிக்கம்,இத்தாலியில் போப் மீதே கரிபால்டி யுத்தம் தொடுத்தது,அமெரிக்க தொழில் வளர்ச்சி,) உலகயே மாற்றி புது உலகம் அமை என்று புரட்சி குரல் கொடுத்த மார்க்ஸ்,என்கல்ஸ் மத நம்பிக்கயயும் அறிவியலையும் பிரித்த சார்லஸ் டார்வின்,ஜான் லாக்கி, க்யூம், வால்டர் போன்ற தத்துவ மேதைகள் கொண்டு வந்த மாற்றங்கள், சிந்தனைகள் ஆகியவையே நவினத்துவம் எனப்படும் பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவதின் குழந்தை.

நவீன யுக சிற்பிகள் கண்ட கனவை அவர்களுக்கு பின் வந்தவர்கள் நிறைவேற்றினர். மார்க்ஸின் கனவு உலகம் ரஷியாவில் அமைந்தது, காலனி ஆதிக்கம் ஒழிந்தது,அறிவியல்,கலை அசுர வேகத்தில் முன்னேறியது, அமெரிக்க ஐரொப்பிய பெண்கள் “குஷ்பூ காட்டிய பாதையில்” சென்றது, பெண்ணியம்,ஜனநாயகம், நிற வேற்றுமை ஒழிப்பு போன்றவயும் நிகழ்ந்தன.

தத்துவ உலகில் பின்நவீனத்துவ தத்துவமேதைகள் என்போர் நீட்ச்செ,மார்க்ஸ் ஆகியோரின் சிஷ்யபிள்ளைகளான கைடெக்கெர், வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் பியர்ஸ், டெர்ரிடா,தாமஸ் குன் ஆகியோர். இவர்கள் கொன்டு வந்த புது தத்துவங்களான ப்ரக்மாடிஸ்ம்,,போஸ்ட் பாசிடிவிஸம்,பெண்னியம்,டிகன்ஸ்ட்ரக்ஷனிஸ்ம் ஆகியவற்றயே நாம் பின்நவீனத்துவ தத்துவம் என்கிறோம்.

 ஆக பின்நவீனத்துவம் என்ற சொல் வெளிநாட்டிலிருந்து வந்தது. அதன் ஆங்கில சொல் post-modernism. அதில் வரும் தத்துவ துறைகள் pragmatism post-positivism liberal ironism feminism marxism empiricism deconstructionism constructionism symbolic interactionism இவை பற்றி விரிவாக நாளை எழுதுகிறேன். ஆனால் இவை அனைத்துக்கும் தாய் மார்க்ஸிசம் என்று சொல்லலாம்.மார்க்ஸிச்ம் என்றால் ரஷ்யாவில் ஒரு காட்டாட்சி நடந்ததே அந்த மார்க்ஸிச்ம் அல்ல.அதற்க்கும் மார்க்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.