உலகின் புதிய கடவுள்

ஜனவரி 28, 2007

9.ஸ்பூன் ஏந்திய 3000 பேர்

Filed under: Communism, Economy, Politics, Short stories — Selvan @ 2:33 பிற்பகல்

குளம் வெட்டும் காண்டிராக்டர் ஒருவரிடம் 300 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். கான்டிராக்டர் திடீரென்று ஏதோ கணக்கு போட்டு ஒரு புல்டோசர் வாங்கி விட்டார். புல்டோசர் வந்ததும் 40 பேருக்கு வேலை போய்விட்டது. துரப்பண வேலைகளை புல்டோசர் செய்தது. இனி மம்முட்டி ஏந்திய ஆட்களால் காண்டிராக்டருக்கு என்ன பயன்?துரத்தி விட்டார்.

 40 பேரில் பலர் வேறு வேலை தேடி வெளியூருக்கு போய்விட்டார்கள்.2 பேர் குளத்தருகே சுற்றிக் கொண்டிருந்தார்கள். புது புல்டோசருக்கு பூஜை போடப்படுவதை கோபத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். புல்டோசர் வேலை செய்யத் துவங்கியது. வேகமாக வேலை செய்தது.

“புல்டோசர் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மம்முட்டி ஏந்திய 40 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியிருப்பார்கள்” என்றான் நெகிழ்ச்சியுடன் ஒருவன்.

“மம்முட்டி மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் ஸ்பூன் ஏந்திய 3000 பேர் இந்த வேலையை செய்து சம்பளம் வாங்கியிருப்பார்கள்” என்றான் புரிதலுடன் இன்னொருவன்.

இருவரும் வேறு வேலை தேடி பட்டணத்துக்கு கிளம்பினார்கள்

6.இந்தியாவை கைதூக்கி விடும் அமெரிக்கா

Filed under: Economy, India, Politics — Selvan @ 2:20 பிற்பகல்

அமெரிக்கா இந்தியாவின் எதிரி என சொல்லுவோர் கவனத்துக்கு

சென்ற வருடம் அவுட்சோர்சிங்கால் கிடைத்த வேலைகள் 13 லட்சம்

சென்ற வருட H1B விசாக்கள் 65,000

சென்ற வருட படிப்பு விசாக்கள் 80466

ஆரகிள் கம்பனி மட்டும் அதிகரித்த இந்திய பணியிடங்கள் 10000

இந்தியாவில் ஐ,பி.எம் ஏற்படுத்திய வேலைவாய்ப்புகள் 10,000 , கெவ்லெட்ட் பக்கார்ட் 10,800,  மைக்ரோசாப்ட் 3000 , டி.ஜி.எஸ் 4400 (இவை அத்தனையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சாப்ட்வேர்கள்,ஆக அமெரிக்காக்காரன் இந்தியாவில் பொருளை உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு விற்கிறான்.சம்பளம் இந்தியனுக்கு)

வருஷா வருஷம் அதிகரிக்கும் சாப்ட்வேர் வேலைகள் 68,000

2008இல் சாப்ட்வேர் கம்பனிகளில் வேலை பார்ப்போர் எண்ணிக்கை பற்றிய நாஸ்காமின் மதிப்பீடு 22 லட்சம்

 இந்திய கம்பனிகளுக்கு கிடைத்த அவுட்சோர்சிங் விற்றுமுதல் 22 பில்லியன் டாலர்(அதிகமில்லை ஜென்டில்மென் 94,600 கோடி ரூபாய் தான்)

அமெரிக்கவுக்கு ஏற்றுமதியான இந்திய பொருட்கள் 15 பில்லியன் டாலர்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது 6.1 பில்லியன் டாலர்.

Theme: Banana Smoothie. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.